வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டக்கலைத்துறையில் அமைச்சு பணியாளர்களின் மாறுதல் மற்றும் நியமனங்களில் அரசு விதிமுறைகளின்படி சீரான நடைமுறையை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காந்திமதி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பார்த்திபன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க முன்னாள் நிர்வாகி நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மாவட்ட இணை செயலாளர்கள் பெர்னாண்டஸ், பாலசுப்பிரமணியன், மகளிர் அணி நிர்வாகிகள் விஜயலட்சுமி, மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி கண்ணன் நன்றி கூறினார்.