அதிமுக வழக்கு: எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தது ஓபிஎஸ் தரப்பு..!


அதிமுக வழக்கு: எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தது ஓபிஎஸ் தரப்பு..!
x

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தற்போது ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

அதிமுக பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, தீர்ப்பை தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் கடந்த 22-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தற்போது ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. அதில் "சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தலின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான வழக்கில் முடிவு செய்ய முடியும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது" என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், வழக்குகள் இன்று பட்டியலிடப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதங்களை ஆராய்ந்த பிறகு தான் நீதிபதி தீர்ப்பளிப்பார் என்றும் வரும் (மார்ச் 27) திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.





Next Story