அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story