அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மருத்துவமனையில் அனுமதி


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மருத்துவமனையில் அனுமதி
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகமாக பதிவாகியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் இன்று 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை மாவட்டத்தில்14 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story