23-ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் ; கே.பி.முனுசாமி
பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என கேபி முனுசாமி தெரிவித்தார்.
சென்னை,
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்ப்போது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
*ஜூன் 23 ல் அதிமுக பொதுக்குழு வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும்.
*மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் அதிமுக பொதுக்குழு நடைபெறும்.
*மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
*ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.
*ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தால் ஈபிஎஸ் எங்களிடம் தெரிவித்திருப்பார்,
*பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.
*அதிமுக உள்கட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும்.
*அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர் செல்வம் உறுதியாக வருவார்.
*பொதுக்குழுவில் பங்கேற்று ஓ.பன்னீர் செல்வம் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார்.
*பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
*பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.