அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
x

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமியின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கிய நிலையில் இந்த மனு மீதான விசாரணை வரும் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கேட்டதால் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story