தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது- ஜெயக்குமார்
தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு 2.5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாக ஏற்படுத்திவிட்டு, அரசுக்கு வர வேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து வைத்துள்ளனர். நாங்கள் தெளிந்த நீரோடையாகவும், திறந்தப் புத்தகமாக உள்ளோம். எங்களின் சொத்துப் பட்டியல் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது- ஜெயக்குமார்அவற்றை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம். தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. கூட்டணிக் குறித்து அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. மத்திய குழுத் தான் முடிவுச் செய்யும்'' என்றார்.