கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மாடூரில் உள்ள ஏ.என்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு திருப்பதி திருமலா தேவஸ்தான போர்டு சிறப்பு பிரதிநிதியும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான குமரகுரு தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொள்ள வேண்டும், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கி பேசினார்கள்.

மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. கட்சியை காத்திடவும், வழி நடத்தவும், 1½ கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி, வாழ்த்துக்கள் தெரிவிப்பது, வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வது, கழகப் பொதுச்செயலாளர் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கினை அடையும் வகையில் பழைய உறுப்பினர்களை புதுப்பிப்பது, தொகுதிக்கு 70 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் அய்யம்பெருமாள், நகர செயலாளர் ஷியாம்சுந்தர், மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் வினோத்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story