சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு


சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
x

கோப்புப்படம்

முதல்-அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சென்னை,

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.

இந்த நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான முதல்-அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.


Next Story