சின்னசேலத்தில்தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சின்னசேலத்தில்தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் மிகுந்துள்ளதை கண்டித்தும் தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். சின்னசேலம் நகர செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ராகேஷ் வரவேற்றார்.

விலைவாசி உயர்வு

மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், இதை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்கள், விலை உயர்வு தொடர்பாகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் பதாகைகளை கையில் பிடித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் அய்யம்பெருமாள், அய்யப்பன், தேவேந்திரன், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு, மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஞானவேல், மாவட்ட இணை செயலாளர் உமாஜெயவேல் உள்ளிட்ட சின்னசேலம் நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story