தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து    அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்


ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து நேற்று காலை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி, அரசூர் கூட்டுரோட்டில் திருவெண்ணெய்நல்லூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ராம.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி ஏகாம்பரம், தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் காண்டீபன், ஒன்றிய இணை செயலாளர் தனலட்சுமி சேகர், ஒன்றிய அவை தலைவர் வேலாயுதம், ஒன்றிய துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தமிழ்ச்செல்வன், ஏழுமலை, இளங்கோ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் நாராயணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அய்யனார், ஒன்றிய விவசாய தலைவர் மோகன் என்கிற கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோலியனூர்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், சீதாகலியபெருமாள், ராஜ், மஞ்சுளா சசிக்குமார், விஜயன், பாக்யராஜ், ரவி, குமரவேல், தனுசு, ரத்தினவேல், ரமேஷ், இந்துமதி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வளவனூர் நகர செயலாளர் முருகவேல் நன்றி கூறினார்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் எசாலம்பன்னீர், முகுந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பூர்ணராவ், மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஒன்றிய அணி நிர்வாகிகள் சரவணன், ஜோதிராஜா, நாகப்பன், ரவி, கோபாலகிருஷ்ணன், நரசிம்மன், பலராமன், கண்ணன், குமார், சிவசங்கர், ஊராட்சி தலைவர் குமரன், வாசு பிரகாஷ், பெரியான், கிருஷ்ணன், திருநாவுக்கரசு, அசோகன், செந்தில் குமார், தேவராஜ், ஜெயமூர்த்தி, மகளிரணி சிவகாமி லட்சுமணன், பிரபாவதி, சுபாகர், ராதாகிருஷ்ணன், அந்துவான், ஒன்றிய கவுன்சிலர் செண்பகவள்ளி குமரன், மாவட்ட கூட்டுறவு அச்சக துணை தலைவர் குமரன், மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம், முன்னாள் கவுன்சிலர் ரவி, மாணிக்கவேல் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

செஞ்சி, மரக்காணம்

செஞ்சி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலம்பூண்டியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தலைமை நிலைய செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், செஞ்சி நகர செயலாளர் வெங்கடேசன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர் , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மரக்காணம் ஒன்றியம் நல்லாளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அர்ஜூனன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், ரவிவர்மன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் புலியனூர் விஜயன், சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story