அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை...!
அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக ஜி.கே.வாசனை சந்தித்தன நிலையில் இன்று மலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர் செல்லம் சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் திடீரென முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் கமலாலயம் சென்று பா.ஜ.க முக்கிய தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
Related Tags :
Next Story