அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் - கோடநாட்டில் சசிகலா பேட்டி


அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் - கோடநாட்டில் சசிகலா பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2024 2:25 PM GMT (Updated: 18 Jan 2024 2:28 PM GMT)

அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன் என்று சசிகலா கூறினார்.

நீலகிரி,

7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவிற்கு இன்று சென்றார். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம், சிலை அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்குகிறார்.

கோடநாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:-

கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் ஜெயலலிதா சிலை திறக்கப்படும். அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும். அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story