அனுமதியின்றி திருமண மண்டபத்தை பயன்படுத்திய அதிமுகவினர்.. சீல் வைத்த அதிகாரிகள்..!


அனுமதியின்றி திருமண மண்டபத்தை பயன்படுத்திய அதிமுகவினர்.. சீல் வைத்த அதிகாரிகள்..!
x

ஈரோடு கிருஷ்ணன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கிருஷ்ணன்பாளையம் வைராபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உரிய அனுமதியின்றி திருமண மண்டபத்தில் அதிமுக-வினர் ஆலோசனை நடத்துவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான குழு மண்டபத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மண்டபத்தில் இருந்த அதிமுக-வினரை வெளியேற்றிய பிறகு மண்டபத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Next Story