அதிமுக தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்தலாம் - டி.டி.வி.தினகரன்
அதிமுக தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்தலாம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
கோவை,
கோவைக்கு வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை ஆட்சி செய்ய ஏன் தி.மு.க.விடம் கொடுத்தோம் என்ற வருத்தத்தில் தற்போது தமிழக மக்கள் உள்ளனர் என்பதுதான் உண்மை. ஆட்சிக்கு வந்து1½ ஆண்டுகளிலேயே மகனுக்கு ஏன் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்று மக்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
வரும் தேர்தலில் ஜெயலலிதா தொண்டர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பக்கத்தில் இருந்தாலும் உண்மையான தொண்டர்களாக நினைப்பவர்கள்ள ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story