புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன வசதி அரசு பஸ் இயக்கம்


புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன வசதி அரசு பஸ் இயக்கம்
x

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன வசதி அரசு பஸ் இயக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இதேபோல் இடைநில்லாமல் இயக்கப்படும் குளிர்சாதன வசதி அரசு பஸ் சேவையும் உள்ளது. இதில் புதுக்கோட்டை வழியாக செல்லும் பஸ்களும் உண்டு. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதலாக ஒரு குளிர்சாதன வசதி கொண்ட அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து காலை 6.10 மணி, காலை 8.45 மணி, காலை 11.42 மணி, மதியம் 2.32 மணி, மாலை 5.10 மணி ஆகிய நேரங்களில் இந்த கூடுதல் பஸ் சேவை இயக்கப்படுகிறது. இடைநில்லாமல் இயக்கப்படும் இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருச்சி சென்றடைவதால் பயணிகள் கூட்டம் இந்த பஸ்சில் அலைமோத தொடங்கி உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story