சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு...!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் தற்போதே பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட தொடங்கிவிட்டனர். அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று இரவு முதலே பட்டாசு வெடிக்கத்தொடங்கியுள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்கு சென்றுள்ளது. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230ஆக உயர்ந்துள்ளது. காற்று மாசின் தரம் பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, வேலூரில் 123, ராயபுரத்தில் 121, கொடுங்கையூரில் 112 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story