காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் இயங்கும்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் இயங்கும்
x

புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story