அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்


அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
x

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி 'ஆசிரியர் தின விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அமமும பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர், அரசியல்வாதி, கல்வியாளர், குடியரசுத் தலைவர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களிடையே நல்ல குணங்களை விதைத்து சிறந்த ஆசிரியராக திகழ்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் உன்னதப் பணி ஆகும். அப்படிப்பட்ட தெய்வீகப் பணியை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

மாணவர்களுடன் இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பிரதான பங்கு வகிக்கின்றனர். உண்மையான ஆசிரியரின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படும் இந்த நன்னாளில் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story