ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய வேண்டும் : அண்ணாமலை


ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய வேண்டும் : அண்ணாமலை
x

தி.மு.க. ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பல தி.மு.க. தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பா.ஜ.க. சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.


Next Story