அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 23 பேரை இடைநீக்கம் செய்தது, விலைவாசி உயர்வு, அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story