நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

கோப்புப்படம் 

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்க்காணல் நடைபெற்றது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்க்காணல் நடைபெற்றது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் ஓ.பன்னீர்செல்வம் நேர்க்காணல் நடத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டது. அவர்களின் விருப்பங்களை அவர்களிடமே கேட்டு பெறப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையில் சிறப்பான அரசு நடைபெற்று வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story