சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 3 அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 3 அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை
x

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அறிவிப்புகளுக்கு மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டது. இதில் 3 அறிவிப்புகளை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85 லட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கவும், ரத்த சோகையை தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்திற்கு 4.75 கோடி ரூபாய், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வுக்கு 1.74 கோடி ரூபாய் என்று மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story