தேவதானம் கோவிலில் தெப்பத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு


தேவதானம் கோவிலில் தெப்பத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
x

தேவதானம் கோவிலில் தெப்பத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வடக்கு தேவதானம் ஊராட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத்தொடர்ந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரிலும் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திலும் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., பேசியதாவது:- தேவதானம் பகுதியில் அமைந்துள்ள நச்சாடைதவிர்த்தருளிய தவம்பெற்ற நாயகி கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற தெப்பத்தை சீரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி ெதரிவித்து கொள்கிறோம் என்றார்.

இதில் நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story