மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி


மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை தொகுதி சார்பில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்தி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு பிரதிநிதியுமான இரா.குமரகுரு தலைமை தாங்கினார். அ.திமு.க. ஒன்றிய செயலாளர் இரா.ஏகாம்பரம், ராமலிங்கம், செண்பகவேல், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் முருகுமணி, தலைமை கழக பேச்சாளர் சேவல் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, இது எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறகழகத்தின் 52-வது ஆண்டாகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடைபெற்ற திட்டங்களையும், அதனை தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களையும், எடப்பாடிபழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் குறித்தும் பேசினா். தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் ஏற்பாட்டில், பா.ம.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.


Next Story