முன்னாள் மாணவர்கள் நிதியுதவி


முன்னாள் மாணவர்கள் நிதியுதவி
x
தினத்தந்தி 17 Sept 2023 3:15 AM IST (Updated: 17 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

உபதலை அரசு பள்ளி மேம்பாட்டிற்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி வழங்கினர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் பள்ளியின் தேவைகளை நிறைவேற்ற உதவுவதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர். அதன்படி பொதுத்தேர்வுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என முன்னாள் மாணவரான சுங்கவரித்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ் நன்கொடை அளித்தார். இதேபோல் மற்றொருவர் 100 பிளாஸ்டிக் இருக்கைகளை பள்ளிக்கு வழங்கினார். முன்னாள் மாணவர்கள் பள்ளி மேம்பாட்டு நிதியை தலைமை ஆசிரியர் ஐரின் ரெஜியிடம் வழங்கினர்.


Next Story