முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திருவள்ளூரில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூரில் உள்ள தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1953-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 300-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்துச் சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி கற்று அரசு மற்றும் தனியார் துறைகளில், பணியாற்றிக் கொண்டு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்ப்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இதில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களிடம் ஆசிப்பெற்று, தேசிய விருது பெற்ற முன்னாள் தலைமையாசிரியர் டி.பி.ஜானகிராமன், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உருவாக உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஒரு பவுன் மதிப்புள்ள தங்க பதக்கம் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 24 கணினிகளை பள்ளிக்கு வழங்கினர்.