ராமேசுவரம் கோவிலில் இன்று அம்பாள் தேரோட்டம்


ராமேசுவரம் கோவிலில் இன்று அம்பாள் தேரோட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆடித்திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் இன்று அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை பர்வத வர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்தார்.. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி திட்டக்குடி அருகே மேல தெருவில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு இரவு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீகோடிலிங்க ரவி சாஸ்திரி, குமார் சாஸ்திரி, கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அது போல் திருவிழாவில் 9-வது நாளான இன்று காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகின்றது. 23-ந்தேதி அன்று மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந் தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று கோவிலில் இருந்து சுவாமி அம்பாள்-பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.


Related Tags :
Next Story