சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் - 5 பேர் காயம்
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம்,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லை அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மற்றொரு அம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் விபத்தில் சிக்கிய ஆம்புலன்சை அப்புறப்படுத்தும் பணியின் போது அந்த ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பற்றி எரிவதற்கு முன்னர் காயம் அடைந்தவர்களை மீட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.