அமித் ஷா இன்று தமிழகம் வருகை..! - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.
சென்னை,
சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் சென்னை வரும் அவர், ஆரேபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
நாளை காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து தமிழக பாஜக மைய குழு நிர்வாகிகளை சந்திக்கும் அமித் ஷா, மக்களவை தேர்தல் பணிகள், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே அமித் ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story