முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவர் கைது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவர் கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முனியசாமி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 67). தனியார் பள்ளியில் தற்காலிகாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தி.மு.க குறித்தும் அவதூறு செய்திகளை பதிவிட்டு வந்து உள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை தி.மு.க.வை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாகராஜனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வந்து நாகராஜனிடம் நேரில் விசாரணை நடத்தினார்.


Next Story