அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா வியாபாரியாக மாறிய என்ஜினீயர்


அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா வியாபாரியாக மாறிய என்ஜினீயர்
x

மதுரவாயல் அருகே அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா வியாபாரியாக மாறிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

மதுரவாயல் அருகே பைபாஸ் சாலையில் மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள், மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ் (வயது 23), கோவை புதூர் பகுதியை சேர்ந்த ரூபுஸ் ஞானராஜ் (23), வானகரம் பகுதியை சேர்ந்த அவினாஷ் (26), என்பது தெரியவந்தது. இதில் ரிஷிகேஷ், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதும், மற்ற இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிந்தது.

கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ள 3 பேரும் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 3 ேபரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story