கலெக்டர் அலுவலகத்தில் திடீரென முதியவர் மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழப்பு.! வேலூரில் அதிர்ச்சி


கலெக்டர் அலுவலகத்தில் திடீரென முதியவர் மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழப்பு.! வேலூரில் அதிர்ச்சி
x

தனது மகனுக்கு வேலை வேண்டி மனு கொடுக்க வந்தபோது நேர்ந்த இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

அந்தவகையில், வேலூர், பெருமுகை பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர், தன் மகனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரக்கோரி மனு அளிப்பதற்காக அவரது மகனுடன் இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்தார்.

இந்த கூட்டத்தில் மனுவுக்கான ரசீது பெறுவதற்காக முதியவரின் மகன் வரிசையில் நின்றுள்ளார். அப்போது முதியவர் ஒரு அலுவலகத்தின் பின்புறம் அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த முதியவர் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்த நிலையில் கானப்பட்டார். இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கவந்த முதியவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது ஆட்சியர் அலுவலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story