ஆன்லைன் மூலம் முதியவரை ஏமாற்றி ரூ.10 லட்சம் நூதன கொள்ளை


ஆன்லைன் மூலம் முதியவரை ஏமாற்றி ரூ.10 லட்சம் நூதன கொள்ளை
x

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆன்லைன் மூலம் செல்போன் கணக்கில் பணம் கட்டசொல்லி முதியவரை ஏமாற்றி ரூ.10 லட்சம் நூதன கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 85). முன்னாள் மத்திய அரசு ஊழியர். இவருக்கு மர்ம நபர் ஒருவர் போனில் பேசி, உங்களது செல்போன் கணக்கில் பணம் இல்லை, உடனே ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள், என்றார். மேலும் அந்த நபர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்து பேசுவது போல நடித்தார். அதை உண்மை என்று நம்பிய சீனிவாசன் ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரீசார்ஜ் செய்தார். அடுத்த கணமே சீனிவாசன் வங்கி கணக்கில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக ரூ.10 லட்சம் வரை சுருட்டப்பட்டு விட்டது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் கோபி அதிரடி நடவடிக்கை எடுத்து, சீனிவாசன் வங்கி கணக்கில் இருந்து சுருட்டப்பட்ட ரூ.10 லட்சம் பணத்தில், ரூ.7 லட்சம் பணத்தை காப்பாற்றினார். குறிப்பிட்ட மோசடி நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல முன்பின் தெரியாத நபர்கள் போனில் பேசி ஏதாவது கதை விட்டு, ஆன்லைனில் வங்கி கணக்கில் இருந்து பணம் கட்டச்சொன்னால், அதை நம்பி பொதுமக்கள் யாரும் பணம் கட்ட வேண்டாம், என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story