சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன் தீயில் எரிந்து நாசம்


சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன் தீயில் எரிந்து நாசம்
x

கரூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன் தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

ஆம்னி வேனில் தீ விபத்து

நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் கரூரில் இருந்து காக்காவாடிக்கு ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கரூர்- கோவை சாலையில் உள்ள வையாபுரி நகர் பகுதியில் வேன் வந்தபோது, கடைக்கு செல்வதற்காக ஆம்னி வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஆம்னி வேனில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் ஆம்னி வேன் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த வேன் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

போராடி அணைத்தனர்

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, ஆம்னி வேன் எப்படி தீப்பிடித்தது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோவை சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story