அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திருச்சி

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட பொருளாளர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்குவதுபோல் அங்கன்வாடியில் பயிலும் 2 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ரசீதில் உள்ளதுபோல் முழுமையாக வழங்க வேண்டும். 1993-ல் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 5 ஆண்டு பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு முதன்மை மைய ஊழியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.


Next Story