வேட்பாளர் தேர்வு தொடர்பாக அண்ணாமலை ஆலோசனை
வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தொகுதி வாரியாக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கருத்துக்களை கேட்ட நிலையில் ,மாநில நிர்வாகிகளிடம் இருந்து வேட்பாளர் தேர்வு தொடர்பாக பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து, அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.உத்தேச வேட்பாளர் பட்டியல் உடன் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் நாளை தேசிய தலைமையை சந்திக்க உள்ளனர் .