"அண்ணாமலைக்கு கண்ணில் கோளாறு.. இன்ஸ்டால்மென்டில் நடை பயணம்.." வெச்சு செய்த ஜெயக்குமார்


அண்ணாமலைக்கு கண்ணில் கோளாறு.. இன்ஸ்டால்மென்டில் நடை பயணம்.. வெச்சு செய்த ஜெயக்குமார்
x

அண்ணாமலை குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சென்னை,

சென்னை மழை பாதிப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் , 'ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது 'என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பதிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதவாது,

"அண்ணாமலையா.. இந்த இன்ஸ்டால்மென்ட்ல நடை பயணம் போறாரே அவரா? இப்போ திமுகவை நாங்க குறை சொல்றோம்னா அதுக்கு காரணம் இருக்கு. மக்கள் விரோத அரசாக இருப்பதால் நாங்க விமர்சிக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் எங்க ஆட்சியை எப்படி அவர் குறை சொல்லலாம்? எங்க ஆட்சி நடக்கும் போது அண்ணாமலை எங்கே இருந்தாரு? கர்நாடகாவுல போலீஸா இருந்தாரு. அவருக்கு தமிழகத்துல என்ன நடந்துச்சுனு எப்படி தெரியும்? அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது" என கூறினார்.


Next Story