அண்ணாமலை எண்ணம் தமிழகத்தில் பலிக்காது - கனிமொழி எம்.பி பதிலடி


அண்ணாமலை எண்ணம் தமிழகத்தில் பலிக்காது - கனிமொழி எம்.பி பதிலடி
x

தூத்துக்குடியில் கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்து, மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி வழங்கினார்.

தூத்துக்குடி,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார் .

தூத்துக்குடியில் மீனவர்களுக்கான நகை கடன் வழங்கும் கூட்டுறவு சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்து, மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி ,

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தானே அதைப்பற்றி கவலைப்படுவதற்கு. எனவே, அண்ணாமலையின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது. ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என்றார்.

1 More update

Next Story