சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவிய அண்ணாமலை


சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவிய அண்ணாமலை
x

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலிப்பு வந்தவருக்கு உதவினார்.

சென்னை

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளர் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் இருந்து ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கிண்டி சாலையில் ஒருவர் வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அண்ணாமலை காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி வலிப்பு வந்தவருக்கு உதவினார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் பால் கனகராஜ், செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் உடனே காரில் இருந்து இறங்கி வலிப்பு வந்த அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அங்கு இருந்துவிட்டு, பின்னர் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story