அண்ணாவின் 115வது பிறந்தநாள்: 12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை


அண்ணாவின்  115வது பிறந்தநாள்: 12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை
x

கோப்புப்படம்

கவர்னர் ஒப்புதலை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இதில் 12 ஆயுள் தண்டனை சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

விடுதலையாகும் கைதிகள் விபரம் வருமாறு:-

கடலூர் சிறையில் இருக்கும் செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் என்கிற உக்கிரவேல் ஆகியோர் விடுதலை பட்டியலில் உள்ளனர். கோவை சிறையில் அபுதாஹீர் என்கிற அபு, விஸ்வநாதன் என்கிற விஜயன், கமல் என்கிற பூரி கமல், ஹரூண் பாட்ஷா என்கிற ஹரூண், சாகுல் அமீது, பாபு என்கிற ஊமையில் பாபு ஆகியோர் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இதே போல் வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ஸ்ரீனிவாசன், சென்னை புழல் மத்திய சிறையில் இருக்கும் ஜாஹீர் என்கிற குண்டு ஜாஹீர் ஆகியோரும் விடுதலையாகிறார்கள்.

இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.


Next Story