சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என அறிவிப்பு


சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என  அறிவிப்பு
x

சென்னையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கூறியிருப்பதாவது:-

செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால், பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சேவை முடங்கி உள்ளதாகவும் பயணிகள் ஆலந்தூரில் ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் வரும் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல வருவதால், ரோஹினி தியேட்டர் அருகே உள்ள நடைமேம்பாலம் வழியே வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அங்கு வருவது பயணிகளுக்கு சற்றே கடினமாக இருக்கும். அரசினர் தோட்ட மெட்ரோவுக்கு வாலஜா சாலை சப்வே சாலை மூடப்பட்டுள்ளதாகவும் பயணிகள் பிற வழிகள் மூலம் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்துக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல ரெயில் சேவை காலை 5 மணி முதல் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ரெயில் நிலையப் பகுதிகளில் தண்ணீர் அளவு பெரிய அளவில் தேங்கவில்லை என்றும் சென்னை மெட்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story