திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி

திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர்களின் ஓட்டல், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது, தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் கூறப்பட்டன.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடியே 44 லட்சம் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று காலை சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காமராஜிக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

திருச்சியில் 3 இடங்களில் சோதனை

திருச்சி கே.கே.நகரில் அய்யர்தோட்டம் 2-வது மெயின்ரோடு, 3-வது கிராஸ் பகுதியில் உள்ள காமராஜின் நண்பர் பாண்டியன் (வயது 53) என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொழிலதிபரான பாண்டியன் பூதலூரில் அரிசி ஆலை, மாத்தூரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இதேபோல் திருச்சி தில்லைநகர் ராமச்சந்திராபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் காமராஜின் நண்பரான இளமுருகன் (45) என்பவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பிளாசம் ஓட்டலிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜின் நண்பர்களுடைய ஓட்டல், வீடுகளில் உள்ளிட்ட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story