காவல்துறைக்கான உலக தடகள போட்டி: தமிழக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சாதனை


காவல்துறைக்கான உலக தடகள போட்டி: தமிழக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சாதனை
x

காவல்துறைக்கான உலக தடகள போட்டியில் தமிழக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை:

நெதர்லாந்து நாட்டில் உலக அளவிலான காவல் துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு தடகளப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறை (ஐபிஎஸ்) கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்றார். இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதல் ஒரு வெள்ளிப் பதக்கம், 100 மீட்டர் தடகளப் போட்டியில் வெண்கலப்பதக்கம், 200 மீட்டர் தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஆகிய 3 பாதகங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.


Next Story