போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
x

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மழையூர் ஊராட்சியை சோ்ந்த தேசிய ஊரக உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிராக முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலம் மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி கடைவீதி வழியாக சென்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


Next Story