சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு எதிரிகளே விளம்பரம் செய்கிறார்கள் - கி.வீரமணி


சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு எதிரிகளே விளம்பரம் செய்கிறார்கள் - கி.வீரமணி
x

திருவாரூரில் 4-ந்தேதி நடக்கவுள்ள சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு எதிரிகளே விளம்பரம் செய்கிறார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூரில் வருகிற 4-ந்தேதி 'சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு' திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளுகின்றனர்.

இந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் தி.நாராயணன் கூக்குரல் போட்டுள்ளார். இது எங்கள் மாநாட்டுக்கு எதிரிகள் செய்யும் விளம்பரம், அதனை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story