அந்தியூர்சின்ன மாரியம்மன் கோவில் தேர் திருவிழா;திரளான பக்தர்கள் பங்கேற்பு


அந்தியூர்சின்ன மாரியம்மன் கோவில் தேர் திருவிழா;திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 March 2023 4:08 AM IST (Updated: 3 March 2023 4:09 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் சின்ன மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனா்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து 60 அடி உயரம் கொண்ட மகமேரு தேரில் சின்ன மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க தேரை ஏராளமான பக்தர்கள் தங்களுடைய தோளில் சுமந்தபடி சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.

1 More update

Next Story