மாணவர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்


மாணவர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர் விடுதி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையின் கீழ் 40 பள்ளி மாணவர் விடுதி, 10 பள்ளி மாணவிகள் விடுதி, 2 கல்லூரி மாணவிகள் விடுதி மற்றும் 1 முதுகலை கல்லூரி மாணவர் விடுதி, 1 கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் 2023-2024-ம் கல்வியாண்டில் சேர மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உணவு, உறைவிடம், 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.

விதிமுறைகள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

மேலும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களின் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைவெளி 5 கி.மீ. தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். விடுதியில் சேர விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று ஆதிதிராவிட நல விடுதிகளில் சேர்க்கை பெற்று பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story