கூடுதல் பொறுப்பில் கமிஷனர் நியமனம்
விருதுநகர் நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பில் கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பில் கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பணிகள் பாதிப்பு
விருதுநகர் நகராட்சி கமிஷனராக இருந்த ஸ்டான்லி பாபு சேலம் மாநகராட்சிக்கு உதவி கமிஷனராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் விருதுநகர் நகராட்சி கமிஷனர் பொறுப்பில் நகராட்சி என்ஜினீயர் மணி நியமிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு முழு பொறுப்பு அளிக்கப்படாமல் சம்பள பட்டியல், மின் கட்டணம், டெலிபோன் கட்டண பட்டியல்கள் ஆகியவற்றில் மட்டும் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டது.
இதனால் நகர் பகுதியில் கட்டுமான பணிகள், வரி விதிப்பு பணி உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டது.
கூடுதல் பொறுப்பு
இதையடுத்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் தமிழகத்தில் 20 நகராட்சிகளுக்கு கமிஷனர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 3 நகராட்சிகளுக்கு மட்டும் கூடுதல் பொறுப்பில் நகராட்சி கமிஷனர்களை நியமித்துள்ளது.
அந்த வகையில் விருதுநகர் நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பில் கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் கமலா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.