மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்


மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்
x

சென்னை மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் 39 ஓதுவார்களை நியமித்து உள்ளார். இதில் 10 ஓதுவார்கள் பெண்கள். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 20 ஓதுவார்கள் கோவில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவரது மனைவி சி.சிவரஞ்சனி, சென்னை மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரம்பலூர் அரசு இசை பள்ளியில் ஆசிரியர் நடராஜனிடம் 3 ஆண்டுகள் படிப்பான தேவாரம் பயின்றுள்ளேன். ஏற்கனவே பி.எஸ்சி., பி.எட். பட்டப்படிப்பும் படித்து உள்ளேன். கோவில்களில் ஓதுவார் பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன். இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ள கமிட்டி நடத்திய தேர்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். அறநிலையத்துறையில் இன்னும் அதிகம் பெண் ஓதுவார்கள் பணிக்கு வர வேண்டும். தமிழக அரசின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும்' என்றார்.


Next Story